TamilsGuide

கந்தளாய் 93-ம் கட்டைப் பகுதியில் அதிகாலையில் விபத்து

ஹபரணைப் பக்கமிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பெற்றோல் பவுசர் ஒன்று இன்று (26) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கந்தளாய், 93-ம் கட்டைப் பகுதியில் அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குறித்த பவுசர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் பெற்றோல் பவுசரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. எனினும், பவுசரின் சாரதி எவ்விதக் காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். விபத்து நிகழ்ந்த போது சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment