முன்னாள் அரச புலனாய்வுத்துறையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிக்கு சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையானின் செயலாளராக பணியாற்றிய அசாத் மௌலானா என்பவர், சுரேஷ் சாலே தொடர்பான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.
எனினும், 2024 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களால், அவர் தனது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


