யாழ்ப்பாணம் தென்மராட்சியிலுள்ள “மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை” மறுசீரமைத்து சீரான இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடல் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (24) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, யாழ் மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்திய சோதி, அரச அதிகாரிகள், விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள், கடைகளின் உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனாக இயங்கச் செய்வதற்காக, யாழ்.அரசாங்க அதிபரின் தலைமையில், தென்மராட்சி பிரதேச செயலர், சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர், விவசாய சம்மேளனங்கள், கடைகளின் உரிமையாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.


