TamilsGuide

வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து எந்த நாடும் பின்வாங்க கூடாது - டிரம்ப் எச்சரிக்கை

வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து எந்த நாடும் பின்வாங்க கூடாது என்றும், அவ்வாறு பின் வாங்கினால் கூடுதல் வரி விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

வர்த்தக பற்றாக்குறையை காரணமாக கூறி, சர்வதேச நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அதீத வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்புக்கு, உலக நாடுகள் மட்டுமின்றி உள்நாட்டிலும் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன.

எனினும் உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை' என்று அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு சர்வதேச நாடுகள் மீதான வரி விதிப்பை 10 சதவீதம் என்று நிர்ணயித்த ட்ரம்ப், பிறகு அதை 15 சதவீதமாக உயர்த்திய நிலையில் தற்போது புதிய வரி அச்சுறுத்தலை ட்ரம்ப் விடுத்து இருக்கிறார்.

இது குறித்து சமூகவலைதளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், உயர் நீதிமன்றத்தின் அபத்தமான தீர்ப்பை விளையாட விரும்பும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் சமீபத்தில் பேச்சு நடத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து பின்வாங்க கூடாது.

மீறினால் சமீபத்தில் ஒப்புக்கொண்டதை விட மிக அதிக வரியை எதிர்கொள்ள நேரிடும்  என கூறியுள்ளார்.

Leave a comment

Comment