TamilsGuide

எப்ஸ்டீன் விவகாரம் - அமெரிக்காவுக்கான பிரித்தானிய முன்னாள் தூதுவர் லண்டனில் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மெண்டல்சன், பொது அலுவலகத்தில் முறைகேடாக நடந்துகொண்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் மற்றும் பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் , பீட்டர் மெண்டல்சனுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு குறித்த விபரங்கள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின.

இவர்களின் நட்பு எந்தளவிற்கு ஆழமானது என்பது குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் அவர் தூதுவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே, அவர் மீது சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் லண்டன் காவல்துறையினர் தற்போது இந்த அதிரடி கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
 

Leave a comment

Comment