TamilsGuide

டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை - விளையாட நினைத்தால் வரிகள் உயரும்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து பின்வாங்க முயலும் நாடுகளுக்கு எதிராக இன்னும் கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ட்ரம்ப் விதித்த பெரும்பாலான உலகளாவிய வரிகளை (Tariffs), 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) அனுமதிக்கவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி வர்த்தக ஒப்பந்தங்களில் "விளையாட" (Play games) நினைக்கும் நாடுகளுக்கு, அவர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டதை விட அதிக வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் எச்சரித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ட்ரம்ப் உடனடியாக வேறு சட்டங்களைப் பயன்படுத்தி 10% வரி அறிவித்து, அதனை 15% ஆக உயர்த்தியுள்ளார்.

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் இந்தியா அண்மைய வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தள்ளிவைத்துள்ளது.

அத்துடன் பிரித்தானியா தனது 10% வரிச் சலுகை ஒப்பந்தம் நீடிக்குமா என்பது குறித்து அமெரிக்காவிடம் விளக்கம் கோரியுள்ளது.

இந்தநிலையில் சட்ட ரீதியான கருவிகள் மாறினாலும், அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment