TamilsGuide

கனடாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு வருமானம் தேவை? – நிபுணர் விளக்கம்

கனடாவில் 20 மற்றும் 30 வயதினருக்கு வீடு கொள்வனவு செய்வது நாளுக்கு நாள் சவாலாக மாறி வருகிறது.

வீட்டு விலைகள் உயர்ந்த நிலையில் தொடர்வதுடன், வீட்டுக் கடன் வட்டி விகிதங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பைவிட அதிகமாக உள்ளன.

இதனுடன் அன்றாட வாழ்க்கைச் செலவுகளும் குடும்பங்களின் வரவு செலவுத் திட்டத்தை நெருக்கடிக்குள் தள்ளுகின்றன.

நிதி ஆலோசகராக பணியாற்றிய கிறிஸ்டோபர் லிவ், கனடாவில் ஒரு சராசரி வீடு வாங்க எவ்வளவு வருமானம் தேவை என்பதை கணக்கிட்டு விளக்குகிறார்.

கனடிய வீட்டு மனை ஒன்றியத்தின் மதிப்பீட்டின்படி, 2026ஆம் ஆண்டில் கனடாவின் சராசரி வீட்டு விலை சுமார் 698,881 டொலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, கனடிய வீட்டு அடமான மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனத்தின் பரிந்துரையின்படி, குடும்பத்தின் மொத்த மாத வருமானத்தின் 30%க்கு குறைவாகவே வீட்டு செலவுகள் இருக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

இதில், வீட்டுக் கடன் தவணை, சொத்து வரி, மின்சாரம்/நீர் போன்ற பயன்பாட்டு கட்டணங்கள், காண்டோ அல்லது பராமரிப்பு கட்டணங்கள் என்பன உள்ளடங்கும்.

உதாரணமாக, 700,000 டொலர் மதிப்புள்ள வீடு வாங்குவதாகக் கருதினால்: முதல் 500,000 டாலருக்கு 5% = 25,000 டொலர், மீதமுள்ள 200,000 டொலருக்கு 10% = 20,000 டொலர் மொத்த முன்பணம் = 45,000 டொலர் 20%க்கு குறைவாக முன்பணம் செலுத்தினால், CMHC காப்பீடு கட்டணம் கட்ட வேண்டும்.

655,000 டாலர் கடனுக்கு சுமார் 26,200 டொலர் (4%) காப்பீடு சேர்க்கப்படும். இதனால் மொத்த கடன் தொகை சுமார் 681,200 டாலராக உயரும்.

எவ்வளவு வருமானம் தேவை? CMHC பரிந்துரைக்கும் 30% விதியை பின்பற்றினால்: மாத வருமானம் குறைந்தபட்சம் 13,500 – 15,300 டொலர் இருக்க வேண்டும். அதாவது ஆண்டுக்கு சுமார் 162,000 – 184,000 டொலர்மொத்த குடும்ப வருமானம் தேவை.

இதனுடன் 45,000 டாலர் முன்பண சேமிப்பும் அவசியம். கனடாவின் நடுத்தர குடும்ப வருமானம் இதைவிட குறைவாக இருப்பதால், பலருக்கு வீடு வாங்குவது எட்டாத இலக்காக தோன்றுகிறது.

கனடாவில் சராசரி விலையிலான ஒரு வீடு வாங்குவதற்கு, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1.6 லட்சம் முதல் 1.8 லட்சம் டொலர் வரையிலான குடும்ப வருமானம் தேவைப்படும் என்பது கணக்குகள் காட்டுகின்றன.

வீட்டு விலைகள், வட்டி விகிதங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், கனடியர்களுக்கு வீடு வாங்குவது அதிக நிதி திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டைத் தேவைப்படுத்தும் ஒரு பெரிய தீர்மானமாக மாறியுள்ளது. 

Leave a comment

Comment