TamilsGuide

ரஜினி or கமல்.. யார் ஹீரோ? டீசரிலேயே hint இருக்கு பாருங்க

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் திரையில் இணையும் KH x RK Reunion படத்தின் ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாஸ் லுக்கில் ரஜினி மற்றும் கமல் இருவரும் அதில் தோன்றி இருக்கின்றனர். இருவரும் ஒன்றாக காரில் ஏறி செல்வது போல தான் டீசரில் காட்டப்பட்டு இருந்தது.

இதில் ஹீரோ யார் என டீசரின் இறுதியில் கமல் கேள்வி எழுப்பி இருப்பார்.

இந்த கேள்விக்கு பதிலை அந்த வீடியோவிலேயே hint ஆக வைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். கமல், ரஜினி இருவரது பெயரும் வரும் இடத்தில் தான் அந்த hint இருக்கிறது.

கமல்ஹாசன் பெயரின் AN என்ற எழுத்துக்கள் மட்டும் வேறு நிறத்தில் இருக்கிறது. அதே போல ரஜினிகாந்த் பெயரில் H என்ற எழுத்து மட்டும் வேறு நிறத்தில் காட்டப்பட்டு இருக்கிறது.

அதனால் வில்லனாக (Antagonist) ஆக கமல் மற்றும் ஹீரோவாக ரஜினி ஆகியோர் நடிக்கிறார்கள் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.  
 

Leave a comment

Comment