TamilsGuide

நாய்க்கு குப்பை கொட்ட பயிற்சி கொடுத்த உரிமையாளருக்கு நேர்ந்த கதி

ஐரோப்பிய நாடான இத்தாலியின், சிசிலி தீவின் கட்டானியா நகரில், சாலைகளில் குப்பைகளைக் கொட்டுவது குற்றமாகும். இதற்காக, 1.3 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில், அந்நகரின் ஒரு சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நாய் ஒன்று தன் வாயில் குப்பை பையைக் கவ்வியபடி வந்து கொட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக நாய், இதேபோன்று செய்த நிலையில், இது தற்செயலானது அல்ல என்று பொலிஸார் உறுதி செய்தனர்.

விசாரணையில், சாலையில் குப்பைக் கொட்டினால் கண்காணிப்பு கேமராவில் சிக்குவோம் என்று, குப்பையைக் கொட்டுவதற்கு நாயை அதன் உரிமையாளர் பழக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நாயின் உரிமையாளரை பிடித்து அபராதம் விதித்தனர்.
 

Leave a comment

Comment