TamilsGuide

ரீ-ரிலீஸாகும் அஜித்தின் துணிவு படம் - முன்பதிவில் செய்துள்ள வசூல்

ரசிகர்களால் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று துணிவு. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், தர்ஷன், சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பாவ்னி என பலரும் நடித்திருந்தனர். 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த துணிவு படம் உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் தான் தற்போதைய ட்ரெண்ட். கில்லி, மங்காத்தா, படையப்பா, சச்சின் ஆகிய படங்கள் ரீ-ரிலீஸில் மாபெரும் வசூல் செய்தன. இதை தொடர்ந்து நாளை கில்லி படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.

இந்த நிலையில், அஜித்தின் துணிவு படமும் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. மங்காத்தா படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகவுள்ள அஜித்தின் துணிவு படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற முன்பதிவில் துணிவு படம் ரூ. 15 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 

Leave a comment

Comment