புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விமர்சனங்களுக்கும், திறனாய்வுக்கும், அப்பாற்பட்டவர். எவ்வளவு திறமையான விமர்சகரும் கூட அவரை முழுவதுமாக விமர்சிக்க இயலாது. அவருடைய
பலம் இதுதான் என எண்ணி விமர்சித்தால் அதையே அவருடைய பலவீனமாக காட்டிவிடுவார். அதே போல
பலவீனம் இதுதான் என்று அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் விமர்சனம் செய்தால் அதையே அவர் பலமாக நிரூபித்து விடுவார். இந்த குணம் கொண்டவரை ஒருவர் மட்டுமே துல்லியமாக சரியாக விமர்சிக்கக் கூடும். அப்படி இந்த அற்புத மனிதரை சரியாக விமர்சனம் செய்யக் கூடிய ஆற்றல் கொண்டவர் வேறு யாருமில்லை. அது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே தான்.
அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூட இன்றும் அவருடைய பலம் எது, பலவீனம் எது என காண முடியாத அளவுக்கு இந்த உண்மை புலப்படும். உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று
திரும்பி வந்த இந்த அற்புத மனிதரின் மறுபிறவி அவருடைய மன உறுதியாலும், அவருக்கு மட்டுமே தெரிந்த பலத்தாலும் தான். சிறந்த அரசியல் சாணக்கியர்கள், பண்டிதர்கள் என்று பேர் கொண்டவர்கள் கூட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்ற அற்புத மனிதரை கணிக்க இயலாது. கலை உலகிலிருந்து அதுவும் நடிப்புத் துறையிலிருந்து அரசு பீடத்தில் அமர்ந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக அரசாட்சி நடத்தி வரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் எந்த அடிப்படையில் அணுகினாலும் ஓர் அபூர்வ மனிதரே!
Yes, MGR is a phenomenon.
-தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சங்கம் - (எண்டர்டைன்மெண்ட்) 11/1987.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.


