பிரான்ஸில் தமிழர்கள் சென்றிந்து வாழும் Sevran பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் விற்பனை குழு ஒன்றை காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக கைது செய்தனர்.
ஆடம்பர கஞ்சா பொதி' என அடையாளப்படுத்தப்பட்டு, ஒருகிலோ கஞ்சா €18,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
காலை 11 மணியில் இருந்து இரவு 11 மணிவரை இந்த 'விற்பனை' அமோகமாக இடம்பெற்று வந்த நிலையில், கடந்தவாரம் 12 பேரை ஒரே நேரத்தில் 93 ஆம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைதின் போது அவர்களிடம் இருந்து 40 கிலோ உலர் கஞ்சா, €128,000 பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. €400,000 பெறுமதியுடைய வீடொன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் நவீன ரகத்தில் ஆடம்பர பொருள் போன்று பொதி செய்யப்பட்டு 'பிராண்ட்' ஒன்றை உருவாக்கி கஞ்சா விற்பனை செய்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


