• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து விபத்து

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் எவருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (18) காலை மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வாழைச்சேனை புனானை பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்தும், பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. எனினும், பயணிகள் அல்லது சாரதிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட நேரத்தில் அப்பகுதியில் மழையுடன் கூடிய வானிலை நிலவியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply