TamilsGuide

ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் ரயில் ஒன்று காட்டு யானையுடன் மோதுண்டு தடம்புரண்டுள்ளது.

943 ஆம் இலக்க இரவு அஞ்சல் ரயிலே இன்று (17) அதிகாலை கந்தளாய் கல்ஓயாவிற்கு இடையில் கிதுல்உத்துவ பகுதியின் 151 ஆவது மைல்கல் அருகே காட்டு யானையுடன் மோதியதில் தடம் புரண்டது.

இந்த விபத்தில் குறித்த யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த யானை சுமார் 15 வயதுடையதாகவும், ஏழு அடி உயரம் கொண்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment