TamilsGuide

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கா.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இன்று  ஆரம்பமானது.

2025ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகிய  நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் பரீட்சைகள் முறையாக நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையிலும் மாணவர்கள் காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் , பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன்  பரீட்சைகளுக்காக வருகைதந்ததை காணமுடிந்தது.
 

Leave a comment

Comment