TamilsGuide

அமெரிக்காவுடன் சமரசத்திற்கு தயார்  - ஈரான் வெளியிட்டத் தகவல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி திட்டம் தொடர்பான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சமரசத்திற்கு தயார் என ஈரான் அறிவித்துள்ளது.

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கினால், அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யத் தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி விவகாரம் தொடர்பான 2ஆம் சுற்று பேச்சுவார்த்தை ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் திருப்புமுனையாக அமையுமா என்பது குறித்து உலக நாடுகள் கவனித்து வருகின்றன

Leave a comment

Comment