TamilsGuide

அமெரிக்காவில் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் பலி 

அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் உள்ள படுவெக்கெட் நகரில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டரங்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்ததுடன் 3 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை ஹொக்கிப் போட்டியின் போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவரும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மற்றொருவரும் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும், குடும்பப் பிரச்சினைக் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 

Leave a comment

Comment