TamilsGuide

உயிரியல் பூங்காவில் குரங்கு பொம்மையிடம் தாயின் அரவணைப்பு தேடும் குரங்குக் குட்டி

ஜப்பான் இச்சிகாவா உயிரியல் பூங்காவில் குரங்கு பொம்மையிடம் தாயின் அரவணைப்பு தேடும் குரங்குக் குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிறந்து சில தினங்களில் தாய் குரங்கு கைவிட்டுச் சென்ற நிலையில், துணைக்காக குரங்கு பொம்மையை குரங்கு குட்டி PUNCH-இடம் பூங்கா ஊழியர்கள் கொடுத்துள்ளனர்.

இந்த குரங்கு குட்டி கடந்த ஜனவரியில் குரங்கு கூட்டத்தில் சேர்த்து விடப்பட்ட போதிலும், செல்லும் இடமெல்லாம் குரங்கு பொம்மையை விடாமல் எடுத்துச் செல்கிறது. குரங்கு குட்டியின் இந்த செயல் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
 

Leave a comment

Comment