TamilsGuide

அமெரிக்காவில் பந்தயத்தில் 17 கார்கள் மோதி விபத்து

அமெரிக்கா ஃபிளோரிடாவின் டேடோனா சர்வதேச கார் பந்தயத்தின் போது, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 17 கார்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

பந்தயத்தின் மிக முக்கியமான கட்டத்தில், ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதியது, இந்த தொடர் விபத்தாக பின்தொடர்ந்து வந்த 17 கார்கள் மாறி மாறி மோதி போட்டியையே நிலைகுலைய செய்தது.

இந்த விபத்தின் போது கார்கள் ஒன்றோடொன்று மோதி தீப்பிடித்ததுடன், பாகங்கள் சிதறி ஓடுதளம் முழுவதும் பரவின. விபத்தை அடுத்து உடனடியாக பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பந்தயம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எனினும் விபத்தில் அதிர்ஷ்டவசமாக, நவீன பாதுகாப்பு வசதிகள் காரணமாக பந்தய வீரர்கள் பெரும் உயிர் சேதமின்றி தப்பினர், இருப்பினும் சில வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாக சென்ற கார்கள் இப்படி நொடியில் நொறுங்கிய காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வானிலை மாற்றம் மற்றும் ஓடுதளத்தின் ஈரப்பதம் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 

Leave a comment

Comment