TamilsGuide

எம்.ஜி.ஆர் பாடலைப் புகழ்ந்த இரு பிரதமர்கள்!

பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக மலேஷியா சென்றுள்ளார்.
பிரதமர் மோடிக்கு, மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேற்று மதிய விருந்து அளித்தார்.
அப்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நாளே நமதே’ திரைப்படத்தில் வரும் ‘நாளை நமதே.. நாளை நமதே’ பாடல் இசைக்கப்பட்டது.
பாடலுக்கு ஏற்ப கலைஞர்கள் நடனம் ஆடினர். இதனை பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார்.
இது குறித்து பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மோடி கூறியிருப்பது:
“இந்தியாவில் உள்ள நம்மில் பலர் போல், என் நண்பர் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிமும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.
என் நண்பர் அளித்த மதிய விருந்தில் எம்.ஜி.ஆர். நடித்த ‘நாளை நமதே’ படத்தில் இருந்து “நாளை நமதே” பாடல் ஒலிக்க, நடனக் குழுவினர் நடனம் ஆடினர்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மோடி சொன்னவை.

இந்தியாவும், மலேஷியாவும் தமிழ் மொழி மீதான பாசத்தால் இணைக்கப்பட்டுள்ளது - மலேஷியாவில் கல்வி, ஊடகம் மற்றும் கலாச்சார வாழ்க்கையில் தமிழின் வலிமையான, துடிப்பான இருப்பைக் காண முடிகிறது.
இன்று கையெழுத்தான ஒலி - ஒளி ஒப்பந்தம், திரைப்படம் மற்றும் இசை மூலமாக, குறிப்பாக தமிழ் சினிமா மூலமாக நமது இதயங்களை இன்னும் நெருக்கமாக இணைக்கும்” என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
https://cinirocket.com/prime-minister-of-malaysia-is-a.../

 

- பாப்பாங்குளம் பாரதி

Leave a comment

Comment