TamilsGuide

கிஷோர் ராஜ்குமாருக்கு கதாநாயகியான அன்னா பென்

நாய் சேகர் பட புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை'. படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து படத்தின் முதல் தோற்றத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

படம் குறித்து இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் கூறியதாவது:-

காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. பாக்யராஜ் படங்களைப் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த ஏக்கத்தை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும். ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அன்னா பென் திறமையான நடிகை. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.
 

Leave a comment

Comment