TamilsGuide

20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்... நடிகர் தனுஷ்க்கு நோட்டீஸ்

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நடிகர் தனுஷுக்கு எதிராக பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திரைப்பட ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் தனுஷ் முடிவு எடுக்காததால், தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் கோரியுள்ளது.

"பிற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் 'ருத்ரன்' திரைப்படம் பாதியிலேயே முடங்கியுள்ளது. கால்ஷீட் தருவது தொடர்பான முடிவை, நடிகர் தனுஷ் விரைவில் தெரிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்," என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

Leave a comment

Comment