நோர்வேயின் முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் (Thorbjorn Jagland) மீது "கடுமையான ஊழல்" (Gross corruption) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, அவர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஆவணங்கள் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


