TamilsGuide

ரஷ்யாவில் வாட்ஸ்அப் பயன்படுத்த தடை- டெலிகிராம் நிறுவனர் சினம்

ரஷ்யாவில் தற்போது வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலிக்கும் புடின் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து வாட்ஸ்அப் கவலை தெரிவித்துள்ளதுடன், இது 10 கோடிக்கும் அதிகமான யூசர்களை தனிமைப்படுத்தும் என கூறியது. மேலும், மக்களுக்கான பாதுகாப்பைக் குறைக்கும் என்றும் வாட்ஸ்அப் குறிப்பிட்டது.

ரஷ்ய அரசு, மக்களை அரசுக்குச் சொந்தமான கண்காணிப்பு செயலிக்குத் திசை திருப்பும் முயற்சியாக வாட்ஸ்அப்பைத் தடுக்க முயல்வது, பாதுகாப்பான தகவல்களிலிருந்து மக்களைப் பிரிக்கும் பிற்போக்குச் செயலாகும்.

யூசர்களை தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என்று வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

டெலிகிராம் நிறுவனர் பவெல் துரோவ், ரஷ்யாவின் இம்முயற்சியை கடுமையாக விமர்சித்தார். தனது தளத்தின் உறுதியான நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

இச்செயல் ஒரு வலுவான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ரஷ்யா டெலிகிராமை கட்டுப்படுத்துவது, அதன் குடிமக்களைக் கண்காணிப்பு மற்றும் அரசியல் தணிக்கைக்கான அரசு கட்டுப்படுத்தப்பட்ட செயலிக்குத் தள்ளவே. இந்த நகர்வு எங்கள் பாதையை மாற்றாது; எந்த அழுத்தத்திலும் டெலிகிராம் சுதந்திரம், தனியுரிமைக்காகவே நிலைத்து நிற்கும் என பவெல் துரோவ் அழுத்தமாகக் கூறினார்.  
 

Leave a comment

Comment