TamilsGuide

இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான “கலைஞர் சுவதம்” விருது வழங்கும் நிகழ்வு நேற்று  இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) தலைமையில் , பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  ஏ.எல். பரீனா மற்றும் எம்.ஏ.நஹ்பீசா அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ஏ.எல். இப்திகா பானு கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்று கலைஞர்கள் “கலைஞர் சுவதம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அந்தவகையில் கமு/சது/அல்-அஷ்ரஃப் தேசிய பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றும் ஏ.எம்.சித்தி இர்பானா இலக்கிய சேவைக்காகவும், பொல்லடியிற்கான கலைஞராக கே.எல்.சுவாப்தீன் அவர்களும் பாடல் மற்றும் டொல்கி துறைக்கான கலைஞராக எஸ்.ரீ.லாபிர் ஆகிய மூன்று கலைஞர்களும் அதிதிகளால் கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் என்.எப். அய்மா, கணக்காளர் எம்.ஆர். நசீமுல் ஹக், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்சான் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் கே.எம்.யு.நிலுபல் குமார, கலாசார உத்தியோகத்தர் ஏ.டப்ளியு. நாளிகா தமயந்தி உட்பட கலாசார பிரிவில் கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் உட்பட கலைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 

Leave a comment

Comment