TamilsGuide

எப்ஸ்டீன் வழக்கில் புதுப் பரபரப்பு - கறுப்பு மையால் மறைக்கப்பட்ட உண்மைகள்

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி உயிரிழந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில், அமெரிக்க காங்கிரஸினால் (Congress) வெளியிடப்பட்ட புதிய ஆவணங்கள் சர்வதேச ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த 6 முக்கிய நபர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், வெளியிடப்பட்ட ஆவணங்களின் பல பகுதிகள் கறுப்பு மையினால் மறைக்கப்பட்டுள்ளன . இவ்வாறு தகவல்கள் மறைக்கப்படுவது ஏன் என்பது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

செல்வாக்கு மிக்க பலரது பெயர்கள் இந்த ஆவணங்களில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான காரணங்களைக் காட்டி பல விபரங்கள் இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்ஸ்டீனின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த அதிகாரப் பின்னணியைக் கண்டறிய அமெரிக்க காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில், இந்த மறைக்கப்பட்ட ஆவணங்கள் முழுமையாக வெளிவர வேண்டும் எனப் பலர் வலியுறுத்தி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a comment

Comment