இலங்கை வானொலியின் பொற்காலம்...
இலங்கை
இலங்கை வானொலியின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் காலகட்டத்தில் பணியாற்றிய ஆற்றல் மிக்க அறிவிப்பாளர்களில் ஒருவர், அமரர் சறா இம்மானுவேல் அவர்கள்.
1976 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நாம் நடாத்தி வந்த 'பெஸ்ரோன்' ஒலிபரப்பு நிலையத்துக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது அங்கே நேயர்களை தனது அறிவிப்பின் மூலம் கவர்ந்து கொண்டார்.
இவருடனான முதல் சந்திப்பு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 'ஆழிக்குமரன்' ஆனந்தன் அவர்களுடைய நிகழ்ச்சியில் நிகழ்ந்தது.
அதன் பின்னர், சறா அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடன், என்னையும் இணைத்துக்கொண்டார்.
கொழும்புக்குச் செல்லும் வேளைகளில் எல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மகிழ்வுடன் கழியும் நேரங்களில் இவருடனான உரையாடல்கள் மறக்க முடியாதவை.
அன்பாலும், பண்பாலும் தன்னுடன் பழகியவர்கள் அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கும் அறிவிப்பாளர் சறா இம்மானுவேல் அவர்கள் என்றும் மறக்க முடியாதவர்.
இது 1982ல் 'பெஸ்ரோன்' ஒலிபரப்புக் கலையகத்துக்கு வருகைதந்த போது 'டில்கா ஸ்ரூடியோ' நிறுவனத்தினரால் எடுக்கப்பட்ட நிழல்படம்.
- எஸ்.கே.ராஜென்






















