TamilsGuide

ஓவர் ஆக்டிங், கொஞ்சம் குறைங்க - ஒரு ஷாட்க்கு 9 டேக் வாங்கிய சிவாஜி

ஓவர் ஆக்டிங், கொஞ்சம் குறைங்க; ஒரு ஷாட்க்கு 9 டேக் வாங்கிய சிவாஜி: தனுஷ் அப்பா சொன்ன ப்ளாஷ்பேக்!

ராஜ்கிரன் நடிப்பில் வெளியாக என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

திரையுலகில் 'நடிகர் திலகம்' என்று போற்றப்படும் சிவாஜி கணேசன், எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும், ஒரே டேக்கில் நடிக்கும் திறமை இருந்தாலும், கஸ்தூரி ராஜாவின் படப்பிடிப்பில் ஒரு காட்சிக்காக 9 டேக் வாங்கியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து கஸ்தூரி ராஜாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ராஜ்கிரன் நடிப்பில் வெளியாக என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், சிவாஜி நடிப்பில், என் ஆசை ராசாவே என்ற படத்தில் நடித்திருந்தார், ராதிகா, முரளி, ரோஜா, விஜயகுமார், சுவலட்சுமி, வினு சக்ரவர்த்தி,. செந்தில், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது, ஒரு குறிப்பிட்ட ஷாட்டிற்காக சிவாஜி 9 டேக்குகள் எடுத்தார். இது குறித்து பேசிய கஸ்தூரி ராஜா, 9 முறை நடித்தும் திருப்தி ஏற்படாத நிலையில், ஏன் இத்தனை டேக்குகள் ஆகிறது என்ற கேள்வி வந்தது. சிவாஜி எத்தனை டேக் கேட்டாலும் நடிப்பார், ஆனால் அவருக்கு காரணம் சொல்ல வேண்டும்.

9 டேக் ஆனவுடன், கோபத்துடன் பார்த்த சிவாஜி, "நான் என்ன செய்தேன் என்று சொல்லாமல், ஏன் 9 டேக் என்று மட்டும் கேட்கிறீர்களே?" என்று கேட்டார். அதற்கு நான் "அண்ணே, நடிப்பு கொஞ்சம் ஜாஸ்தியாக (Over-acting) இருப்பது போல இருக்கிறது, அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே" என்று தயக்கத்துடன் சொன்னேன். "கம்மியா நடிக்கணுமா? நடிப்புன்னா உங்களுக்கு அவ்வளவு ஈஸியா போயிட்டா?" என்று ஆவேசமாகக் கேட்டுவிட்டு, நீ நடித்து காட்டு என்று சொன்னார்.

அதன்பிறகு நான் நடித்து காட்டியவுடன், சிவாஜி நடிச்சிடுவான் என்று யாரும் என்னிடம் என்ன வேண்டும் என்று சொல்வதே இல்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொன்னால் தானே எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். 

தமிழச்சி கயல்விழி
 

Leave a comment

Comment