TamilsGuide

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு

கனடாவில் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், தாக்குதல்தாரி ஒரு பெண் என தற்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன.

நேற்று மதியம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு நபர் நடத்திய தாக்குதலில், தாக்குதல்தாரி உட்பட குறைந்தது 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

தாக்குதல்தாரியும் தன்னைத்தான் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், தாக்குதல்தாரி குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

ஆனால், அவர் குறித்து அருகிலுள்ள வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது, எச்சரிக்கை செய்தியில், சந்தேக நபர் பழுப்பு நிற தலைமுடி கொண்ட பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதே நபர்தான் பள்ளிக்குள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்பதை பொலிசார் தற்போது உறுதி செய்துள்ளனர். 

Leave a comment

Comment