TamilsGuide

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கின் 2ஆவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க, பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தி 36 மணித்தியாலங்களில் 166 இலட்சம் ரூபா நிதியை செலவிட்டு தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இன்று வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் இன்றைய வழக்கு விசாரணையின் பின்னரும் தொடர்ந்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த வழக்கு விசாரணையின்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக இங்கிலாந்து சென்றமை உத்தியோகபூர்வ விஜயம் அல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
 

Leave a comment

Comment