TamilsGuide

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..

இன்று காலை (11) இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் கிழக்குமாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M A சுமந்திரனும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நீக்குதல் மற்றும் அதற்கான புதிய சட்ட வரைவு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் சம உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
 

Leave a comment

Comment