2025 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்விப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது தரப்பினர் தொடர்பிலும் அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்துக்கு முறைப்பாடு அளிக்கலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 வரை பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


