TamilsGuide

செயற்கை நுண்ணறிவு குறித்து கனடிய மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

சுகாதார தகவல்களுக்கு அதிகமான நோயாளிகள் செயற்கை நுண்ணறிவு (AI) தளங்களை நாடி வருவது கவலைக்குரியது என கனடிய மருத்துவ சங்கம் (Canadian Medical Association – CMA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தேசிய அமைப்பு, முதன்மை சுகாதார சேவை வழங்குநர்களை (primary care providers) அணுக முடியாத பலர், எளிதில் கிடைக்கும் மற்றும் விரைவான பதில்களை வழங்கும் AI தளங்களை நாடி வருவதாக தெரிவித்துள்ளது.

இதில் அதிகமான தகவல்கள் தவறானவை, வழித் தவறவைக்கும் தகவல்கள் அல்லது முற்றிலும் பொய்யானவை. இது நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கிடையேயான நம்பிக்கையை பாதிக்கிறது என கனடிய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் மார்கோட் பர்னெல் கூறியுள்ளார்.

Abacus Data என்னும் நிறுவனத்தினால் நடத்தியுமுள்ள புதிய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

5,001 கனடியர்களிடம் அவர்கள் சுகாதார தகவல்களை எங்கிருந்து பெறுகிறார்கள், எந்த மூலங்களை நம்பகமானவை என கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்து அறியப்பட்டுள்ளது.

பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், குறிப்பாக ஒரு நோய், அறிகுறி அல்லது சிகிச்சை முறைகள் குறித்த தகவல்களை அறிய இணையத்தை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.

64% பேர் இணையத்தில் பார்த்த சுகாதார தகவல்கள் பின்னர் தவறானவை அல்லது வழித்தவற வைப்பவை என தெரிந்ததாக கூறியுள்ளனர்.

மேலும் 29% பேர் இது அரிதாகவே நடக்கும் என தெரிவித்துள்ளனர். AI மூலம் வழங்கப்படும் சுகாதார தகவல்களை நம்புகிறோம் என கூறியவர்கள் 27% மட்டுமே. இருப்பினும், சுமார் அரைபங்கு பேர் Google AI தேடல்கள் அல்லது ChatGPT போன்ற தளங்களை சுகாதார தகவல்களுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

38% பேர் சிகிச்சை ஆலோசனைக்காக ChatGPT பயன்படுத்தியதாக கூறியுள்ளனர்.

AI ஆலோசனைகளை பின்பற்றியவர்கள், அதனால் உடல்நலத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்பட்டதாக கூறும் வாய்ப்பு, மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகம் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

நோயாளிகள் இணையத்தில் தகவல் தேடி வருவது புதியது அல்ல. ஆனால் AI தளங்கள் ஒருவரின் முழுமையான மருத்துவ வரலாற்றை கருத்தில் கொள்ளாமல் ‘தெளிவான’ பதில்களை வழங்குகின்றன,” என டாக்டர் பர்னெல் கூறியுள்ளார். 

Leave a comment

Comment