தமிழ் தாண்டி பான் இந்தியா அளவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார், விஜய் சேதுபதி.
தற்போது 'டிரெய்ன்', 'ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவின் 'அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் -சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக பேசப்பட்டது.
அதாவது ராவணன் (யாஷ்) தம்பி விபீஷனன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது.
இதனை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். "நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதுபோன்ற தகவல் எப்படி பரவியது? என்று எனக்கு தெரியவில்லை", என்று அவர் கூறி உள்ளார்.


