TamilsGuide

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடும் குளிரால் 18பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நிலவி வரும் கடுமையான குளிரினால் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனவரி மாத இறுதியிலிருந்து நியூயோர்க் நகரம் கடுமையான குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 நாட்களுக்குள் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் நாட்களிலும் இந் நிலை தொடர்ந்தால் நியூயோர்க் நகரம் கடுமையான ஆபத்தை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

Leave a comment

Comment