TamilsGuide

கனடா கியூபா நாட்டுக்கு இடையிலான விமான சேவை நிறுத்தம் - ஏர் கனடா அறிவிப்பு

கனடாவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான விமான சேவையை ஏர் கனடா விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே, கியூபா நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உரசல் காணப்படுகிறது. 

ஏற்கனவே சரியான மின்சாரம் கிடைக்காததால் அவதியுற்றுவரும் கியூபா, ட்ரம்பின் அச்சுறுத்தல்களால் கூடுதல் அவதிக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட வெனிசுலா எண்ணெய் டேங்கர்களை அமெரிக்க நிர்வாகம் கைப்பற்றியுள்ளதால் நிலைமை மேலும் மோசமாகி எரிபொருள் மற்று மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது அந்நாட்டில்.

மேலும், கியூபாவுக்கு எந்த நாடாவது எண்ணெய் வழங்கினால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா தடைகள் விதிக்கும் என்று வேறு ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.

கியூபா, கனேடியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்றாகும். விடயம் என்னவென்றால், கியூபாவுக்குச் செல்லும் விமானங்கள், அங்கிருந்து திரும்பும்போது, அவற்றிற்கு எரிபொருள் நிரப்பப்படவேண்டும்.

ஆனால், கியூபாவில் விமானத்துக்கான எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஆகவே, கியூபாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான விமான சேவையை நிறுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக ஏர் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்றாலும், ஏற்கனவே கியூபாவிலிருக்கும் கனேடியர்கள் சுமார் 3,000 பேரை, எப்படியாவது வரும் நாட்களில் கனடாவுக்கு திரும்ப அழைத்துவர இருப்பதாகவும் ஏர் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment