TamilsGuide

புர‌ட்சித்த‌லைவ‌ர் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் 8-ஆவது முதல்வராக 3-ஆவது முறையாக பதவி ஏற்ற நாள் இன்று...

புர‌ட்சித்த‌லைவ‌ர் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் 8-ஆவது முதல்வராக 3-ஆவது முறையாக பதவி ஏற்ற நாள் இன்று...

அவர் பதவியேற்ற நாள் 1985-ஆண்டு பிப்ர‌வ‌ரி மாதம் இதே 10-ஆம் தேதிதான்..

இதில் வியப்பூட்டும் தகவல் ஒன்று உண்டு...

தமிழகத்தின் எட்டாவது சட்டமன்ற தேர்தலான இந்த தேர்தல் நடைபெற்ற நாள் டிச‌ம்ப‌ர் 24, 1984 ஆகும்.

இந்த நாளிலிருந்து ச‌ரியாக மூன்றாண்டுக‌ள் க‌ழிந்து இதே நாளில்தான் நம் மக்கள்திலகம் இயற்கை எய்தினார்..

இந்த தேர்தலில் நம் கழக கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள்: 1,16,81,221

வாக்கு சதவீதம்: 53.87%

வெற்றி வாகை சூடிய தொகுதிகள்: 195

இத்தேர்தலில்தான் 'எம்.ஜி.ஆர் ஃபார்முலா' என்றழைக்கப்படும் கூட்டணி உடன்பாட்டு முறை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.

இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம் பெறும் தேசியக் கட்சிக்கு 70 % இடங்களும், மாநிலக் கட்சிக்கு 30% இடங்களும் ஒதுக்கப்பட்டன.

அதே சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம் பெறும் தேசிய கட்சிக்கு 30% இடங்களும், அதிமுகவுக்கு 70% இடங்களும் ஒதுக்கப்பட்டன.

1984-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த இந்த தேர்தலில் கருணாநிதி சட்டமன்றத்துக்கு போட்டியிடவில்லை... அப்போது அவர் மேலவை உறுப்பினர்...

ஆனால் '50-ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் கருணாநிதி' என்று எப்போதும் போல திமுக வரலாற்றை திருத்தி மட்டுமே சொல்லும்..

VR S Selvendhiran
 

Leave a comment

Comment