TamilsGuide

புரட்சித்தலைவருக்கு அமெரிக்க ஏடு புகழாரம் !

அண்ணா வழியில் செயலாற்றும் கறைபடாத கரங்கள் !
புரட்சித்தலைவருக்கு அமெரிக்க ஏடு புகழாரம் !
எம்.ஜி.ஆர் என பெரும் புகழுடன் அழைக்கப்படும் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் நியூயார்க் நகருக்கு வருகை தந்தார். தமிழகத் திரை வானில் சுடர் விட்டு ஜொலிக்கும் பிரபல சினிமா நடிகரும், இன்றைய தமிழக முன்னணி தலைவருமான எம்.ஜி.ஆரின் தேசபக்தியும் தீவிரத் தன்மையும், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. எம்.ஜி.ஆர் மிக எளிமையானவர். சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ள ஏழை எளியவர்களின் நல்வாழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர் அறிவாற்றல் உள்ள சிறந்த பேச்சாளர் ஆவார்.
இவருக்கு 1953 இல் அறிஞர் அண்ணா அவர்களால் சிறப்பிக்கப்பட்ட பின்னர் உண்மையான விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அண்ணாவின் தலைமையில் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றிகளிலும் மிக முக்கிய பங்கேற்றார்.
1967 ஆம் ஆண்டு சட்டசபை உறுப்பினரானார். தி.மு. கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெருநோக்கு கொண்டவரும் சமுதாய சீர்திருத்த சிற்ப்பியுமான
அறிஞர் அண்ணாவின் எதிர்பாராத மறைவினால், ஏழைகள் வாழ்வில் ஏற்றம் காண வேண்டும் எனும் அண்ணாவின் கனவும், தி.மு.க. வின் மாபெரும் திட்டங்களும் துரதிர்ஷ்டவசமாக செயல்படாமல் போய்விட்டது.
அண்ணாவின் நிதானமான சமதர்ம கொள்கைகள் ஏழைகளை மிகவும் கவர்ந்தது. அவர் சமத்துவத்தை விரும்பினார். புரட்சிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களின் மனதை பக்குவப்படுத்தினார். அண்ணாவின் ஆரோக்கிய அரசியலால் , உலகில் தி.மு.க கழகத்துக்கு அசைக்கமுடியாத கவுரவம் கிடைத்தது.
அறிஞர் அண்ணா அவர்களின் திடீர் மறைவுக்கு பின்னர் புதிய தலைமை அவருடைய லட்சியங்களுக்காக வாழ முடியவில்லை காரணம் லட்சங்களுக்கு ஆசைப்பட்டது தான்.
அண்ணா அவர்களின் உண்மை சீடரும், கட்சியின் பொருளாளருமான எம்.ஜி.ஆர் இத்தகைய போக்கினை எதிர்த்து போர் முரசு கொட்டியபோது , அவர் விசாரணைகள் தடுக்கப்பட்டன. கட்சிக்குள் நடக்கும் இத்தகைய அராஜகபோக்கினால் மனம் வெதும்பி துயரத்துடன் மக்களிடையே சென்று கட்சித் தலைவர்களின் கேவலமான போக்கிற்கு காரணம் கேட்டு முறையிட்டார்.
மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள ஆரம்பித்த எம்.ஜி.ஆரை ஆதிக்க சக்தி பலனை அடைந்தவர்கள் சும்மா விடுவார்களா ?
கட்சியில் தற்காலிகமாக தள்ளி வைப்பதாக கூறி கடைசியில் வெளியேற்றி விட்டனர். எந்தவிதக் காரணமும் கூறாமல் !
இப்படி உருவான புதிய இயக்கம் புயலாக மாறி தமிழகத்தை கலக்கியது !
ஊரெங்கும் கலகம். உணர்ச்சி வயப்பட்ட மக்கள் தி.மு.க கொடிகளைத் தீ வைத்து கொளுத்தினர்.
தி.மு.க. வின் சர்வாதிகார தர்பாரை எதிர்த்து ஒருமுகமாக மக்கள் எழுந்தனர்.
தமிழக மக்கள் முழுவதும் தங்களுடைய ஆதரவை எம்.ஜி.ஆருக்கு வழங்கினார்கள். தி.மு.கழகத்திலிருந்து ஏராளமான தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் அழியாவண்ணம் காக்க எம்.ஜி.ஆரை வற்புறுத்தினார்கள்.
கட்டுக்கடங்காத வெள்ளமென எழுந்த மக்களின் உள்ள உணர்வுகளை மதிக்கும் வகையில் புதிய கட்சி உருவாவது தவிர வேறு வழியில்லை. எனவேதான்.

அறிஞர் அண்ணா அவர்கள் விட்டுச் சென்ற பணிகள், அண்ணா வழியில் தொடர்ந்து செயலாற்ற கறைபடாத கரங்களுடன் அண்ணா தி.மு.க உதயமானது.
#அமெரிக்க_இந்தியன்_அப்ராட்
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்
புகழ்.
VR S Selvendhiran
 

 

Leave a comment

Comment