TamilsGuide

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பலி

கனடாவின் கிளின்டன் நகரின் வடபகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 38 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில் லொப் வீதி மற்றும் டச் லைன் வீதிகளுக்கு இரண்டு வாகனங்கள் மோதியதாக அவசர அழைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஒரு வேன் (van) மற்றும் ஒரு பிக்கப் லாரி (pickup truck) மோதிக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனில் பயணித்த நால்வர் – ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் – அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் 38 வயதுடைய எக்சிட்டர் (Exeter) பகுதியைச் சேர்ந்த பெண் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. வேனில் இருந்த ஆண் தீவிர காயங்களுடன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரண்டு குழந்தைகளுக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்கப் லாரி ஓட்டுநரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சம்பவம் தொடர்பான தகவல் அல்லது வீடியோ காட்சிகள் இருப்பவர்கள் காவல்துறையிடம் அந்த தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பின்னர் பல மணிநேரங்கள் சாலை மூடப்பட்டிருந்தது. பின்னர் அது மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. 
 

Leave a comment

Comment