அதுக்குத்தானே அலைகிறார்கள் எல்லோரும்…
புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனுராதா ஸ்ரீராம் சேர்ந்து பாடல் தயாராக இருந்தார்கள்.
எப்போதும் பாடல் வரிகளை கவனமாக படிப்பவர் குப்புசாமி
அவர் கேட்டார்:
"‘தொப்புளுக்கும் அதுக்கும் ஒரு சான் தூரம்’? அது என்ன?"
பாடலாசிரியர் பதில் சொன்னார்:
"நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்… அது ‘இதயம்’!"
குப்புசாமி:
"இதயம்? எங்கே?"
பாடலாசிரியர்:
"இரண்டாவது சரணத்தின் கடைசியில் தான் இருக்கிறது. பார்த்தீர்களா?"
புஷ்பவனம் குப்புசாமி சிரித்துப் கூறினார்:
"நான் பாடிய பிறகு கடைசி வரியை நீ வெட்டி வெளியிட்டால் என்ன ஆகும்? என்னை செருப்பால் அல்லவா அடிப்பார்கள்!"
அந்த நேரத்தில் அனுராதா ஸ்ரீராமிடம்
"பாடல் நீ பாடாதே என்றார்
நான் பாடகி. என்ன கொடுத்தாலும் பாடுவேன்!" என்றார் அவர்.
முடிவில் புஷ்பவனம் குப்புசாமி:
"நாசமா போங்க!" என்று வெளியேறினார்.
கடமைக்கு வேலை செய்வதற்கும் வேலையை கடமையாக செய்வதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று இப்போது புரிகிறது..!!


TamilsGuide
தொப்புளுக்கும் அதுக்கும் ஒரு சாண் தூரம்…
