மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் வாகன தரிப்பித்தை மாநகரசபை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள் தம்மை சுதந்திரமாக வாழ விடாது அடக்கி ஒடுக்கம் இந்த செயலை கண்டித்து நேற்றுஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்
மத்தியஸ்தர் வீதியில் வைத்தியசாலை மதில் ஓரமாக மாநகர சபை தற்காலிக கொட்டகை அமைத்து , வாகன தரிப்பிடமாக்கி அதனை குத்தகைக்கு வழங்கி வந்தனர் .
இந்த நிலையில் அந்த வாகன தரிப்பிடத்தை மேலும் வீதி பகுதியை ஆக்கிரமித்து தற்காலிக கொட்டகை அமைத்து விஸ்தரரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையால் அந்த வீதியில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டிவரும் அபாயகரமான நிலை ஏற்படும்
எனவே இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு அந்த வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை, உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதமூலம் அறிவித்தனர்.
ஆனால் அந்த விஸ்தரிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அந்த அடக்கு முறைக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாடத்துக்கு ஏற்பாடு செய்ததையடுத்து அங்கு ஒன்று கூடிய பெண்களை அங்கு வந்த அராஜக கும்பல் ஒன்று அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து ஒன்று கூடியவர்களில் சிலர் அங்கிருந்து வெளியேறி வீடுகளுக்கு சென்றனர்.
இதனையடுத்து அங்கிருந்த ஏனைய பொதுமக்கள் வேண்டாம் வேண்டாம் வாகன தரிப்பிடம், மத்தியஸ்தர் வீதியில் உள்ள மக்களை சுயாதீனமாக சுதந்திரமாக வாழவிடு, மாநகரசபையே மத்தியஸ்தார் வீதி மக்களை ஒடுக்காதே, இந்த வாகன தரிப்பிட விஸ்தரிப்புக்கு மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதி வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் , போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


