மத்திய மாகாணத்தின் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் அரசாங்க நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர அவர்கள், ஹட்டன் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர அவர்கள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதேசத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாத்து, பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் தரமான சேவையை வழங்குவதே இந்த புனரமைப்பின் முக்கிய நோக்கமாகும்.


