TamilsGuide

பராக் ஒபாமா, மிச்செல் ஒபாமா தொடர்பில் வீடியோ - எல்லைமீறி வாங்கிக்கட்டிய ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மிச்செல் ஒபாமாவை அவமதிப்பது போல், குரங்குகளை போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு அந்நாட்டில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்ததை விமர்சனம் செய்திருந்தார்.

ஜோ பைடனையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில், தனது 'ட்ரூத் ' சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டு இருந்தார்.

ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் 2020 தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது எனத் தெரிவித்து இருந்தார். மேலும், இந்த வீடியோவில், ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் தலையை குரங்குகளில் உடலில் பொருத்தி பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

இதற்கு அமெரிக்காவில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை ட்ரம்ப் வெளியிடுவது இது முதல் முறை அல்ல.

கடந்த ஆண்டு, ஓவல் அலுவலகத்தில் ஒபாமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

Leave a comment

Comment