TamilsGuide

சாலை விபத்து ஏற்ப்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் அதிரடி கைது

பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜு, விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று, திருவனந்தபுரத்தில் மணியன்பிள்ளை ராஜு ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்தவுடன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக மணியன்பிள்ளை ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

விபத்து நடந்த போது அவர் மது போதையில் இருந்தாரா என்பதை கண்டறிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

Leave a comment

Comment