• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலைவர் எம்ஜிஆர் முதல்வர் ஆன பின்பு

சினிமா

இப்போ இருக்கும் அவர் நினைவுஇல்லத்தில் அப்போ கட்சி அலுவலகம் ஆக செயல்பட...
அந்த தெருவில் ஒரு பைக் மற்றும் கார் மெக்கானிக் கடை வைத்து ஒருவர் உழைத்து பிழைத்து இருக்க....
சரம் சரம் ஆக வந்த காவல்துறையினர் இப்போ இது முதல்வர் அலுவலகம்.... இங்கே உங்க கடை வாசலில் அவ்வளவு பைக் கார்கள் நிற்க அனுமதி இல்லை வேறு இடம் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்ல.....
ஜனங்களின் நாயகன் புரட்சித்தலைவர் செய்தி அறிந்து அவரை அழைத்து எதோ மக்கள் துணை கொண்டு இந்த நிலைக்கு வந்து உள்ளேன்...
உங்கள் தொழில் பாதிக்க படவும் கூடாது...
இங்கே என் அலுவலகம் மட்டும் அல்ல இங்கே குடியிருக்கும் பொது மக்களும் பாதிக்க கூடாத வகையில் தொழில் நடத்துங்க என்கிறார்...
அப்புறம் என்ன அந்த சாலையில் யாரும் பாதிக்க படாத வண்ணம் எல்லாம் நடந்தது சிறப்புடன் ...
இப்போ உள்ள திடீர் தலைவர்கள் இடத்தில் வசிக்கும் பொது மக்கள் என்ன இப்படி தொந்தரவு எங்களுக்கு என்று பொது வெளியில் சொல்லியும் எல்லாம் பார்த்து இதுவே எனக்கு பெருமை என் இடத்தில் என்று நினைத்தால் பாவம் என்றே தோன்றுகிறது..
பனயூர் பண்ணையார் ஆதிக்கம் குறுநில மன்னர் போல என்றே தோன்றுகிறது..
எல்லோரும் எம்ஜிஆர் அல்ல என்றே நமக்கு தோன்றுகிறது....
வாழ்க தலைவர் புகழ்
உங்களில் ஒருவன்..
தொடரும்..நன்றி..
50000 பேர் மனு வாங்கி என்று பெருமை பொய் வேற உங்க கட்சி தலைவர் மட்டும் ஆவது ஜெயிப்பாரா சொல்லுங்க.
Nellaimani Admk

Leave a Reply