முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
300 மில்லியன் ரூபாய் பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சமித்ரி ரம்புக்வெல்ல கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


