TamilsGuide

இத்தாலி ரோம் தேவாலய ஓவியத்தில் பிரதமர் மெலோனியால் சர்ச்சை

இத்தாலி ரோமில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்று புதுப்பிக்கப்பட்ட நிலையில் அதிலுள்ள ஓவியம் பிரதமர் மெலோனியின் உருவத்தை ஒத்திருப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

ரோம் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்று சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த தேவாலயத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில், ஒரு தேவதூதனின் முகம், இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனியின் முகத்தைப் போலவே வரையப்பட்டுள்ளது.

தேவாலயத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டவர் மெலோனியின் கட்சியுடன் அரசியல் ரீதியில் தொடர்புடையவரான புரூனோ (Bruno Valentinetti) என்னும் நபர். அவர் வேண்டுமென்றே மெலோனியின் முகத்தை தேவதூதனின் முகமாக வரைந்தாரா என இத்தாலி ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இத்தாலியின் கலாச்சாரத்துறை அமைச்சரான அலெசாண்ட்ரோ (Alessandro Giuli) இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மெலோனிக்கு புகழைக் கொண்டு வரும் நோக்கம் தனக்கு இல்லை என புரூனோ ஒரு பக்கம் மறுப்பு தெரிவிக்க, மெலோனியும், நான் நிச்சயம் தேவதூதனைப்போல இல்லை என சமூக ஊடகம் ஒன்றில் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment