TamilsGuide

சீரியல் புகழ் நடிகை ரிந்தியா... லேட்டஸ்ட் போட்டோஸ் 

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் சீரியல்கள் நடித்தவர் ரிந்தியா.

பெரும்பாலும் இவர் வில்லியாக நடித்து மிரட்டியுள்ளார். குங்குமபூ தொடரில் அறிமுகமான ரிந்தியா திருமதி செல்வம் தொடர் மூலம் மக்களிடம் வரவேற்பு பெற்றதோடு அதிகம் திட்டும் வாங்கியுள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிக்கண்ட தெய்வமகள் தொடரில் மலையாள ரீமேக்கில் முக்கிய நாயகியாக நடித்து அங்கேயும் பிரபலமானார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்த ரிந்தியா ஒரு கட்டத்தில் சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

முக்கிய நாயகியாக நடித்துக்கொண்டு வந்த ரிந்தியா இப்போது துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். சரி அவர் தனது இன்ஸ்டாவில் மாடர்ன் உடைகளில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment