மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் இன்றைய தினம் காலை அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இந்த தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன்,பிரதி ஆணையாளர்,மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசிய கொடியினை மாநகரசபை ஆணையாளரும் மாநகரசபை கொடியினை மாநகர முதல்வரும் ஏற்றியதை தொடர்;ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன.


