நுவரெலியா மாவட்ட செயலகம் , நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா மாநகசபை ஏற்பாட்டில் இன்று (04) நுவரெலியா – பதுளை பிரதான வீதி உள்ள நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக பிரமாண்டமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
இதன் தொடக்க விழா 26 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு குழுவினரின் இசை வாத்தியங்கள் முழங்க இவ்விழா அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பாடசாலை மாணவ, மாணவியர்கள் தேசிய கீதத்தை இசைத்தலுடன் தேசியக் கொடியினை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காக்கும் உன்னத நோக்கத்திற்காக உயிர்நீத்த அனைத்து தேசபக்தர்கள் போர்வீரர்களை மற்றும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பாடசாலை மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறையினரின் பங்கேற்புடன் பல கலாச்சார நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளால் வண்ணமயமாக இருந்தது.
குறித்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துஷாரி தென்னகோன் மற்றும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானமஞ்சுள சுரவீர ஆராய்ச்சி , நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சருமான மதுர செனவிரத்ன , நுவரெலியா மாநகரசபை முதல்வர் உபாலி வனிகசேகர முப்படைகளின் கட்டளை தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


